முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார் - ஏராளமானோர் அஞ்சலி

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77

Update: 2018-12-23 07:01 GMT
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த 1941-ம் ஆண்டு கடலங்குடியில் பிறந்த அவர், சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் தொல்காப்பிய களஞ்சியம், தமிழ் மக்கள் வரலாறு மற்றும் சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை போன்றவை அடங்கும். இவர் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை 3 முறை பெற்றுள்ளார்.  கடந்த 1986-ம் ஆண்டில் சிறந்த​பேராசிரியர்களுக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார்.  நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த க.ப. அறவாணன் இன்று அதிகாலை காலமானார். சென்னை அமைந்தகரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிசடங்கு நாளை நடைபெறுகிறது. அறவாணன் மறைவுக்கு திமுக தலைவர்  ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்