ஜெயலலிதா சொத்தை நிர்வகிக்கும் வழக்கு: தீபா மற்றும் தீபக்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Update: 2018-12-18 20:04 GMT
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  2016ம் ஆண்டு தேர்தலின் போது வேட்புமனுவில் ஜெயலலிதா குறிப்பிட்ட சொத்து விவரங்களையும், வழக்கில் தொடர்புடைய சொத்துக்களையும் ஒப்பிட்டு பார்த்து, சரியானவையா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக்கிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், ரத்த சொந்தங்கள் இருப்பதால் சொத்துக்களுக்கு நிர்வாகிகளை நியமிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்