சென்னை ஐ ஐ டி -யில் சாதியப் பாகுபாடு ? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை ஐ. ஐ. டி உணவகத்தில் சைவ, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என தனித் தனிநுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update: 2018-12-15 12:14 GMT
சென்னை ஐ. ஐ. டி உணவகத்தில் சைவ, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என தனித் தனிநுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இச்செயல் அப்பட்டமான சாதியப் பாகுபாடாகும் என்றும், கல்லூரி நிர்வாகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்