புனிதசவேரியார் ஆலய தேர் திருவிழா - தலித் பகுதிக்குள் தேரை வரவிடாமல் புறக்கணிப்பதாக புகார்

தலீத் மக்கள் தங்களது வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-12-02 22:36 GMT
திருச்சி மாவட்டம்,   சமயபுரம்அருகே புறத்தாக்குடி புனிதசவேரியார் ஆலய தேர்  அப்பகுதியிலுள்ள தலித் பகுதிக்கும் செல்ல வேண்டும் என்று கடந்த  2017 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு  தேர் தலித் பகுதிகளுக்கும் சென்றது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தலித் பகுதிக்குள் தேரை வரவிடாமல் உயர் சாதியினர் புறக்கணித்து வருவதாக தலீத் சமுகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தலீத் மக்கள் தங்களது வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்