புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்

கஜா புயல் கோர தாண்டவத்தால் பெரும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.;

Update: 2018-11-28 09:32 GMT
கஜா புயல் கோர தாண்டவத்தால் பெரும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நாகை ஊராட்சி ஒந்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும், இறந்தவர்கள் குடும்பத்தினர் 3 பேருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் கொடுத்தார். தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை இலவசமாகவும், சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான இழப்பீடு தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 


அதிமுக கட்சி அலுவலகத்தில் நிவாரணப் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி



புயல் பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு:

Tags:    

மேலும் செய்திகள்