ஆணவக்கொலை செய்யப்பட்ட நத்தீஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ4,12,500 உதவி

ஒசூரில், ஆணவக்கொலை செய்யப்பட்ட நத்தீஸின் குடும்பத்திற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 லட்சத்து 12,500 ரூபாய் நிவாரண நிதி, 3 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.;

Update: 2018-11-28 03:41 GMT
ஒசூரில், ஆணவக்கொலை செய்யப்பட்ட நத்தீஸின் குடும்பத்திற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 லட்சத்து 12,500 ரூபாய் நிவாரண நிதி, 3 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஸ் சுவாதி தம்பதியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாதியின் உறவினர்கள், ஆணவப்படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தற்போது அரசு சார்பில் நத்தீஸின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்