விடுப்பு வழங்குவதில் தகராறு - காவலரை கீழே தள்ளிய காவல் ஆய்வாளர்

சென்னையில் காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2018-11-25 06:39 GMT
சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் தர்மன். இவர், கடந்த வாரத்தில், தனது தாயாரின் ஈமச்சடங்கிற்கு விடுமுறை வேண்டும் என ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டிருக்கிறார். ஆனால் விடுமுறை அளிக்க, ஆய்வாளர் ரவிச்சந்திரன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த காவலர் தர்மன், போக்குவரத்து காவலர்கள், அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாக்கி டாக்கியில் தன்னுடைய தாயாரின் இறுதி காரியத்துக்கு, ஆய்வாளர் ரவிச்சந்திரன், விடுமுறை தரவில்லை எனக் கூறியுள்ளார். 

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள் அவரை எச்சரித்து, பணியிடை நீக்கம் செய்தனர். இந்தநிலையில், சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவலர் தர்மனை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழிமறித்து கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கீழே விழுந்த காவலர் தர்மனை, ரவிச்சந்திரன் தனது ரோந்து வாகனத்தில் தூக்கி போட்டு, அவரது வாயில் வலுகட்டாயமாக மது ஊற்றும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்