கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உயிர் கொடுக்க முயன்ற விவசாயி

கஜா புயலால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்த தென்னை மரங்களை மீண்டும் நட்டு வைக்கும் முயற்சியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

Update: 2018-11-20 19:56 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்  மாணிக்கம். இவர் தன் விவசாய நிலத்தில் 200க்கும்  மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். கஜா புயலால் இவர் தோட்டத்தில் இருந்த 60க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. 30 வருடங்களுக்கும் மேலாக பிள்ளைகள் போல வளர்த்து வந்த மரம், வேரோடு சாய்ந்ததால் மன வேதனைக்கு ஆளான மாணிக்கம், அவற்றிற்கு மீண்டும் உயிர் கொடுக்க முடிவெடுத்தார். பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆழமாக குழி தோண்டி அதில் தென்னை மரங்களை நட்டு வைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். ஓரிரு மரமாவது மீண்டும் உயிர் பெற்றால் தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்