புயலினால் சாய்ந்த மரம் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு

புயலினால் சாய்ந்த மரம் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்

Update: 2018-11-19 12:03 GMT
திண்டுக்கல் மாவட்டத்தை கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் பழனி தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல், மேல்மலை மற்றும் கிழ்மலைப் பகுதிகளில் ரூ. 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட காபி, மிளகு, ஆரஞ்சு போன்ற பயிர்கள் அழிந்துள்ளன. மேலும் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. இதில் சாய்ந்த மரம் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். என வலியுறுத்தி பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் விவசாயிகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் வினயிடம் மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்