டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் - சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-12 09:33 GMT
* டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* போர்க்கால அடிப்படையில்  டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவும், அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து மாத்திரைகள், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்க கோரி, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை
மற்றும் அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை குறித்து வரும் 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்