சென்னையில் 40 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் : கடந்தாண்டைவிட 40 டன் குப்பைகள் குறைவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 40 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

Update: 2018-11-07 10:24 GMT
தீபாவளி அன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து குதூகலமாக கொண்டாடினர். வெடித்த பட்டாசுகளின் காகிதங்கள், அட்டை பெட்டிகள் சாலைகள், தெருக்களில் சிதறிக் கிடந்தன. சென்னையில், அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த 11 மணி நேரத்தில் சுமார் 40 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. 200 வார்டுகளில் இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் 40 டன் அளவுக்கு பட்டாசு குப்பைகள் குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்