சிதம்பரம் : முதன்முறையாக தீபாவளி கொண்டாடும் பழங்குடி மக்கள்

சிதம்பரம் அருகே பழங்குடியின மக்கள் முதன்முறையாக, புத்தாடை அணிந்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

Update: 2018-11-05 08:26 GMT
சிதம்பரம் அருகே பழங்குடியின மக்கள் முதன்முறையாக, புத்தாடை அணிந்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாட உள்ளனர். 

அங்குள்ள சி.மானம்பாடி கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்த சுமார் 26 பழங்குடியின இருளர் குடும்பத்தினர் சமீபத்தில் மீட்கப்பட்டனர். இதையறிந்த பூராசாமி என்ற சமூக ஆர்வலர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பழங்குடியின மக்களுக்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கியுள்ளார். இதனையடுத்து முதன்முறையாக புத்தாடை அணிந்து பழங்குடியின மக்கள் தீபாவளியை கொண்டாட உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்