சர்க்கரை மாத்திரை இல்லாத அரசு மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இல்லாததால், தினமும் மாத்திரை வாங்கி செல்லும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-10-30 18:43 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில்  சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இல்லாததால், தினமும் மாத்திரை வாங்கி செல்லும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
கடந்த ஒரு வாரமாக சர்க்கரை நோய்க்கு மாத்திரை வாங்க வரும் மக்களிடம், மாத்திரை தீர்ந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், சேலத்தில் உள்ள குடோனிலேயே சர்க்கரை மாத்திரைகள் தீர்ந்து விட்டதாக கூறுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே விரைவில் சர்க்கரை மாத்திரைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   
Tags:    

மேலும் செய்திகள்