இணையவழி பட்டா மாறுதல்படிவம் அனுப்பும் முறை

வருவாய்துறைக்கு, இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-10-27 09:09 GMT
வருவாய்துறைக்கு, இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒப்புகை சீட்டு அசல் ஆவணம் திரும்ப பெறும் போது சார்பதிவாளரால் கையொப்பமிட்டு வழங்கப்படும் எனவும், ஒப்புகை சீட்டில் வருவாய்துறையால் அளிக்கப்பட்ட விண்ணப்ப எண் அச்சிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. www.eservice.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் AMMA eservice of land records என்ற செயலி மூலம்  மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் நத்தம் மற்றும் நகர புல எண்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பத்திர பதிவு துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டம் தொடங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்