இறந்த கோயில் காளைக்கு இறுதிச் சடங்கு செய்து வழிபாடு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சேர்ந்த ராமசாமி என்பவர் பெருமாள் கோயிலுக்கு காளை ஒன்று வளர்த்து வந்துள்ளார்.;

Update: 2018-10-26 03:31 GMT
பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது ஓட்டத்தில் வெற்றி வாகை சூடிய காளை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது. இதையடுத்து, காளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் கலந்து கொண்டு காளையின் உடலுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்ற பின்னர் காளை மாடு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராமசாமி தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்