குட்டிகளுடன் ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் கரடிகள் - கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் பகலில் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.;
* நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் பகலில் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
* பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகள், சோலுார் மட்டத்தை சேர்ந்த நடராஜ் என்பவரை தாக்கியுள்ளன.
* அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து கரடிகளை விரட்டி விட்டுள்ளனர்.
* பின்னர் படுகாயம் அடைந்த நட்ராஜை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோத்தகிரி பகுதியில் முகாமிட்டுள்ள கரடிகளை வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோ ரிக்கை விடுத்துள்ளனர்,