அதிமுக அலுவலகத்தில் வைக்கப்படவுள்ள ஜெயலலிதாவின் புதிய சிலை

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைப்பதற்காக, ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலை, சென்னை கொண்டு வரப்பட்டது.

Update: 2018-10-23 10:08 GMT
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் முக அமைப்பு, ஜெயலலிதாவைப் போன்று இல்லை என விமர்சனங்கள் எழுந்ததால், அந்த சிலையை அகற்றி புதிய சிலை வைக்க அதிமுக தலைமை முடிவு செய்தது. இதையடுத்து, புதிய சிலை செய்ய ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் வழங்கப்பட்டது. சிலை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து,  8 அடி உயரம், 800 கிலோ எடை கொண்ட சிலை, இன்று   சென்னை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் விரைவில் புதிய சிலை நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலையை வடிவமைத்த ராஜ்குமார் என்பவர் தான், கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்த்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை, சோபன் பாபு சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்டவற்றையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்