போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்

சென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Update: 2018-10-22 11:48 GMT
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,  பேருந்து இயக்கத்தில் உள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டும், அகவிலைப்படியை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த இருந்தனர். இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 11 தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடந்தும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்