கனிம வளத்துறை ஊழியரை கொலை செய்த உறவினர்கள் - தலைமறைவாக உள்ள உறவினர்களை தேடும் போலீஸ்

மேட்டூரில் கனிம வளத்துறை ஊழியரை கொலை செய்து தலைமறைவாக உள்ள உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2018-10-19 01:15 GMT
மேட்டூரில் கனிம வளத்துறை ஊழியரை கொலை செய்து தலைமறைவாக உள்ள உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர் செட்டிப்பட்டியைச் சேர்ந்த கனிம வளத்துறை  ஊழியர்  மயில்சாமிக்கும், அவரது உறவினர் மகாதேவன் குடும்பத்தாருக்கும் நேற்று மாலை வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகாதேவன் குடும்பத்தார் மயில்சாமியை கம்பால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மயில்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள  போலீசார் தலைமறைவாக உள்ள மகாதேவன் குடும்பத்தாரை தேடி வருகின்றனர்.            

Tags:    

மேலும் செய்திகள்