பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கைத்தொழில் - அரசின் உதவியை எதிர்பார்த்து சாமானிய பெண்கள்...

தென்னங்கீற்று முடைந்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் சாமானிய பெண்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளதை பதிவு செய்கிறது

Update: 2018-10-16 14:41 GMT
* கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில், தென்னை மர மட்டைகள், தாராளமாக கிடைக்கின்றன. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கொண்டு வரப்படுகிறது. சில சமயங்களில், இங்கு தென்னை மட்டைகள் கிடைக்காவிட்டால் கேரளா சென்றும், வாங்கி வருகின்றனர்.

* இதனை தண்ணீரில் ஊற வைத்து பக்குவப்படுத்தி, கீற்றுகளாக தயாரிக்கின்றனர். இந்த பணியில், பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், சராசரியாக ஒரு நாளைக்கு, 250 ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். 

* ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் தொழில் பாதிப்பு அடையும் நிலையில், தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னங்கீற்று முடைந்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கும், இந்த சாமானிய பெண்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்