சிதம்பரம் நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் - 3,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர்.

Update: 2018-10-14 05:30 GMT
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று நாட்டியாஞ்சலி தொடங்கி 5 தினங்களுக்கு நடைபெறும். 

இந்த விழாவின் நிறைவு நாளான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, நாட்டியக் கலைஞர்கள் 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கோயிலுக்குள் , பல்லவி, அனுபல்லவி, சரணம், கீர்த்தனை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடனம் ஆடி தங்களது நாட்டிய நடனத்தை நடராஜருக்கு அர்ப்பணித்தனர். சிதம்பரம் கோயிலில் நாட்டிய அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிற தங்களது பலநாள் கனவு நனவானதாகவும்  நாட்டியக் கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்