பரிதி இளம்வழுதி மறைவு : தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Update: 2018-10-13 09:24 GMT
பரிதி இளம் வழுதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. கடந்த 1959-ம் ஆண்டு பிறந்த பரிதி இளம் வழுதி, திமுகவின் துணை பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார். 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், துணை சபாநாயகர், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், அம்மா  மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக இருந்து வந்தார். பரிதி இளம் வழுதியின் உடல் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து தன்னந்தனியாக குரல் கொடுக்க கூடியவர் பரிதி இளவம்வழுதி என புகழாரம் சூட்டினார். 

இதனையடுத்து அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்