சிலை காணாமல் போனது குறித்து எதுவும் தெரியாது - ஸ்தபதி முத்தையா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன சிலை குறித்து அப்போது இணை ஆணையராக பணியாற்றிய திருமகளுக்குத் தான் தெரியும் என ஸ்தபதி முத்தையா தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-12 23:38 GMT
சென்னை கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 
7 முக்கிய கோயிலில்களில் சிலைகள் காணமல் போனதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள்,குருக்கள் உள்ளிட்டோரிடம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சிலை காணாமல் போனது குறித்து ஸ்தபதி முத்தையாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய முத்தையா, அது குறித்து  அப்போது இணை ஆணையராக பணியாற்றிய திருமகளுக்குத் தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, தற்போது இந்து அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக உள்ள திருமகளிடம், சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்