"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்

ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-10-11 09:45 GMT
ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளது. இந்த மாற்றத்தால், தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்