சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பழனியில் போராட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்யப்ப சேவா சங்கம் சார்பாக, பழனி பாத விநாயகர் கோவிலில் இருந்து பேரணி புறப்பட்டு, பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர்.