அழிந்து போனது முத்துச் சிப்பி தொழில் - மாற்றுத் தொழிலுக்கு மாறிய மீனவர்கள்
முத்துச் சிப்பி சேகரிக்கும் தொழிலை கைவிட்டு, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் சங்குகளை சேகரிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்;
* முத்துச்சிப்பி எடுத்து வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொண்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள், தற்போது சங்கு எடுக்கும் பணியில் தீவிரமாகியுள்ளனர்.
* முத்துச் சிப்பி தொழிலால், முத்து நகர் என்று பெயர் பெற்ற இந்தப் பகுதி மீனவர்கள், காலப்போக்கில், மாற்றுத் தொழிலாக, சங்குகளை சேகரிக்க கடல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
* சர்வதேச வீட்டு உபயோக மற்றும் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட முத்துச்சிப்பி, தட்ப வெப்ப சூழலால், அழிந்து போனதாக தெரிவித்துள்ள மீனவர்கள், அரசின் அனுமதி பெற்று, சங்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* முக்குளித்து முத்தெடுத்து முத்து நகர் மீனவ மக்கள், தற்போது முக்குளித்து சங்கெடுக்கும் சூழ்நிலையில், இந்த தொழிலை மேம்படுத்த, அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.