அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு - அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள்
புதுச்சேரியில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்றது.;
புதுச்சேரியில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்றது. 102 இடங்களுக்கு, 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில், புதுச்சேரியை தவிர்த்து மற்ற இடங்களில் இடமிருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, பெற்றோருடன் மாணவர்கள் சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவைக்கு சென்ற அவர்கள் அமைச்சர் கமலக்கண்ணனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.