உலக சுற்றுலா தின விழிப்புணர்வு நடைபயணத்தில் மாணவர்கள் பங்கேற்பு

உலக சுற்றுலா தினத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு நுழைவு வாயிலில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Update: 2018-09-27 08:26 GMT
தமிழக சுற்றுலாத்துறை சார்பில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உலக சுற்றுலா தின நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பாரம்பரிய கிராமியக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் நடனங்கள் நடத்தப்பட்டன. கிராமிய கலை நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்