அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.;
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கதிராமங்கலத்தில் நூலக கட்டடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு திறப்பு விழா 2 முறை தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள பொதுமக்கள், விரைவில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.