ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்"

ஜெயலலிதாவின் மறைவு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வர் பதவியேற்க முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக அவரது செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-09-13 00:31 GMT
ஜெயலலிதா உயிரிழந்ததாக டிசம்பர்  5ம் தேதி மாலை 6 மணிக்கு செய்தி வெளியானதை தொடர்ந்து, அது வதந்தி என அப்பல்லோ மறுப்பு செய்தி  வெளியிட்டது. 

அதேநேரம், அன்று இரவு ஜெயலலிதா உயிரிழந்தாக முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்தச் சூழலில் அன்று மாலையே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான பணிகளை செய்ய அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அவரது செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், ஆணையத்திற்கு பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பது தெரிந்தும், அவரை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு  அழைத்து செல்ல ஆளுநர் பரிந்துரை செய்யாதது ஏன் என ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணைய வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்