ஆண்டுக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பு - ஜென்னா ஜாம்பேக்

அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜென்னா ஜாம்பேக், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-12 04:31 GMT
அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜென்னா ஜாம்பேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக ஜென்னா ஜாம்பேக் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்