சவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்

சவுதி அரேபியாவில் ஆடுமேய்த்து வரும் பொறியியல் பட்டதாரி தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் வீடியோ மூலம் கதறியுள்ளார்.

Update: 2018-09-08 19:12 GMT
தர்மபுரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரதாப்,  சவுதியில் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற நண்பர் ஒருவரின் ஆசை வார்த்தையை நம்பி வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனத்தை நாடியுள்ளார்.அந்நிறுவனம்  2 லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு கடந்த மாதம் அவரை சவுதிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அங்கு சென்ற பின் அவரின் பாஸ்போர்ட், விசா மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு ஆடு மேய்க்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மறுத்தால் பாஸ்போர்ட்டை கிழித்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்நிலையில் வேறு நபரின் செல்போன் மூலம் தனது குடும்பத்திற்கும், தம்பிக்கும் தன்னை காப்பாற்றும்படி வீடியோ அனுப்பியுள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மத்திய அமைச்சகம் என பல்வேறு இடங்களில் அவரது சகோதரர், பிரதாப்பை மீட்க உதவுமாறு மனு அளித்து வருகிறார்.  


Tags:    

மேலும் செய்திகள்