கிராமியப் பாடல்களை கற்றுக் கொடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்...

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் கிராமியப் பாடல்களை கற்றுத் தருகிறார்.

Update: 2018-09-08 12:39 GMT
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரால்நத்தம் கிராமத்தில் இயங்கி வரும் முத்தானூர் அரசு தொடக்கப் பள்ளியில் 127 மாணவர்கள் படித்து வருகின்றனர்.1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வியின் தரமும் குறைவாகவே இருந்ததாக பெற்றோர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் பள்ளிக்கு மாற்றலாகி வந்தவர் ஆசிரியர் தெய்வநாயகம். இவர் இந்த பள்ளிக்கு வந்த பிறகு பள்ளியின் அடையாளமே மாறிப் போனது. முதல்கட்டமாக தொடக்கப்பள்ளியை ஆங்கில வழிக் கல்விக்கு நிகராக மாற்றினார். இதனால் 50க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 127 ஐ எட்டியது.

மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆடிப்பாடி பாடங்களை பயிற்றுவிப்பது இவரின் வழக்கம். இதனால் மாணவர்களும் ஆர்வமாகவே பாடங்களை படித்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு தாலாட்டு பாடல்களையும் இவர் கற்றுத் தருகிறார். கல்வியோடு மாணவர்களுக்கு பாரம்பரிய​ங்களையும் போதிக்கும் ஆசிரியர் தெய்வநாயகத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்