சென்னை ஐசிஎப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில்...

சென்னை ஐசிஎப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் தயாராகி வருவதாக அதன் பொது மேலாளர் மணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-08 12:18 GMT
சென்னை ஐசிஎப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் தயாராகி வருவதாக அதன் பொது மேலாளர் மணி தெரிவித்துள்ளார். சென்னை ஐ.சி.எப்பில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்காக ரயில்பெட்டி போன்ற வடிவைப்பில் புதிதாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு நவீன உணவகம் தொடங்கப்பட்டது. இதனை ஐசிஎப் பொது மேலாளர் மணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிநவீன வசதிகளுடன் உருவாகி வரும் ரயில் தயாரிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்