"தமிழகத்தில் மின்தேவை 2,000 மெகாவாட் அதிகரிப்பு"

தமிழகத்தில் உயர்ந்தபட்ச தேவை நேரத்தில் மின்தேவை 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2018-09-07 12:08 GMT
கடந்த புதன்கிழமை மின்சார தேவை 14 ஆயிரத்து 798 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் மின்சார தேவை 12 ஆயிரத்து 885 மெகாவாட்டாக இருந்துள்ளது. தமிழகம் முழுவதும் நிலவி வரும் வெப்பநிலை அதிகரிப்பால் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் குளிர்சாதன வசதிக்காக ஆயிரம் மெகாவாட்டும், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 500 மெகாவாட்டும் மின்சாரம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, காற்றாலை மற்றும் குறைந்ததும், பெரும்பாலான அணைகள் மூடப்பட்டதால் நீர்மின் உற்பத்தி குறைந்திருப்பது, மின் உற்பத்தி குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர, கூடன்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி காலதாமதம் ஆவதும், நிலக்கரி கையிருப்பு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் மின்சாரத்தின் விலை அதிகமாக உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின்தேவையை எதிர்க்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்