கருணாநிதிக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி
பதிவு: செப்டம்பர் 07, 2018, 03:57 PM
மறைந்த முன்னாள்  முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில், தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சார்பாக இசை அஞ்சலி நடைபெற்றது.  25-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கருணாநிதிக்கு பிடித்தமான பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை வாசித்து கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.