செல்போனில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் "செல்போன் சாமியார்"..!

கரூரில் சாமியார் ஒருவர் செல்போன் மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

Update: 2018-09-07 08:13 GMT
ஸ்ரீசத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆலயத்தில் சாமியாராக இருப்பவர், பாபாஜி. பொறியியல் படிப்பு படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தற்போது ஆன்மிகத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்து, செல்போன் மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதனால், உள்ளூர் மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இவரை அழைக்கின்றனர்.

 பார்த்தசாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாபாஜி, தொடக்கத்தில் ஒரு பக்தராகத்தான் சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், அப்போது கோவிலில் பூஜை செய்ய வேண்டியவர் வெளியூர் சென்றிருந்ததால், அன்று மட்டும் இவர் பூஜை செய்துள்ளார். காலப்போக்கில் பாபாஜியாக மாறி, அங்கேயே தங்கிய அவர், பின்னர் செல்போன் மூலம் அருளாசி வழங்கத் தொடங்கினார். இதையடுத்து, செல்போன் சாமியார் என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்