மதுப்பாட்டில் வாங்க தண்டவாளத்தின் சிமெண்ட் சிலாப் கம்பிகளை விற்ற மாணவர்கள் கைது

சென்னையில் பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாபுகளை வைத்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-09-07 08:01 GMT
சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, தண்டவாளத்தின் மீது  சிமெண்ட் சிலாபு இருந்துள்ளது. ரயில் ஓட்டுநர் அதைப் பார்த்தவுடன் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மது போதையில் யாராவது சிமெண்ட் சிலாபை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்ட நிலையில், ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை  கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு சிலாப் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்த நிலையில், நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட,  பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்துள்ளது. சிமெண்ட் சிலாபில் உள்ள கம்பியை விற்று மதுகுடித்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்