'எந்திரன்' படக்கதை - ரூ.1 கோடி இழப்பீடு கோரிய வழக்கு இறுதி விசாரணை

எந்திரன் படக் கதை தொடர்பாக, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிய வழக்கின் இறுதி விசாரணையை, செப்டம்பர் 28 ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.;

Update: 2018-09-06 22:17 GMT
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில், 2010ல் வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் தொடர்ந்திருந்தார். இதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார். மேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் சங்கருக்கு, 
10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்