நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

Update: 2018-08-31 16:44 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்,  நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி, வருகிற 4 ம் தேதி, டாக்டர் சரவணன், மாதவன், ஜெ. தீபா, ஜோசப், மதுரை பாலன், பாலமுருகன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் ஆஜராக வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமலிங்கத்திடம்  மறு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், 5 ம் தேதி, டாக்டர்கள் சத்தியபாமா, ராமச்சந்திரன், அர்ச்சனா மற்றும் அதிமுக பிரமுகர் மனோஜ் பாண்டியன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.  6 ம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ், டாக்டர் விக்ரம் , டாக்டர் ராஜ் மாதங்கி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்