பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பிரசாரம் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பதிவு: ஆகஸ்ட் 23, 2018, 01:40 PM
சென்னை தலைமைசெயலகத்தில், விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நடந்தது. இதில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மக்காத பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் எனக் கூறினார். இதனைதொடர்ந்து, விழிப்புணர்வு குறும்படம், வலைதளம், செயலி, குறியீடுகளை முதலமைச்சர் அறிமுகம் செய்தார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசாரத்தின் விளம்பர தூதராக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோரை அரசு நியமனம் செய்துள்ளது.