நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
பதிவு: ஆகஸ்ட் 22, 2018, 12:51 PM
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொடிமங்களம் கிராமத்தில் மேல்நிலை நீரேற்ற தொட்டி உள்ளது. இந்த தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை தொட்டியின் மேலே ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். இந்த தொட்டி சுமார் 100 அடிக்கும் மேல் உயரம் கொண்டதாகும். மாவட்ட ஆட்சியர் இதுபோல தொட்டி மீது ஏறி ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.