தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக இந்திய கடற்படை கப்பல்கள் செல்ல முடியுமா?

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக இந்திய கடற்படை கப்பல்கள் செல்ல முடியுமா? என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-08-22 03:47 GMT
* தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

* நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீன்வளத் துறை இயக்குனர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

* அதில்,  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
* 1991 முதல் 2013 வரை நடந்த 168 துப்பாக்கி சூடு சம்பவங்களில்,  85 மீனவர்கள் பலியானதாகவும், 180 மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
* 2011 முதல் இதுவரை இலங்கை கடற்படையினரால்  பிடித்துச் செல்லப்பட்ட 3 ஆயிரத்து 33 மீனவர்களும், 393 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  
  
* தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 
 மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு, இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையை கேட்டுள்ளதாகவும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
 
* இதையடுத்து, நடுக்கடலில் இந்திய எல்லையை மீனவர்கள் கண்டறிவது கடினம் எனவும் இதற்கு தீர்வாக, நாட்டிகல் மைல் அளவீடு கருவியை மீனவர்களின் படகுகளில் பொருத்தினால் எல்லையை தெரிந்து கொள்ள முடியும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

* அதுவரையிலும், மீனவர்களுக்கு பாதுகாப்பாக கடற்படை கப்பல்கள்  செல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பியதோடு வழக்கை வரும் 31ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்