பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-08-21 13:52 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாயில் நாளை முதல் 9 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், தேனி மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். மேலும், பெரியாறு அணையிலிருந்து, 18-ம் கால்வாய் நீட்டிப்பு திட்ட பகுதிகளுக்கு, சோதனை ஓட்டமாக நாளை முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வைகை அணையிலிருந்து புதிய கால்வாயில் நீர் திறக்க உத்தரவு

இதேபோல், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை பகுதிகளுக்கு செல்லும் புதிய கால்வாயில் சோதனை ஓட்டத்திற்காக நாளை 300 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் உள்ள 228 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்