10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்புகிறது வைகை அணை
பதிவு: ஆகஸ்ட் 18, 2018, 04:57 PM
கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்து சுமார் 2 ஆயிரத்து 336 கன அடி நீர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி.  நாளைக்குள் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.10 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.