கிராம சபை கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்
பதிவு: ஆகஸ்ட் 15, 2018, 04:52 PM
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருவேங்கைவாசல் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கணேஷ் வந்தார். அப்போது அவரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட 10 கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அதனை உடனே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.