சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான் - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் பேச்சு
பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே 2வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.அதன் பின் சுதந்திர தின உரையாற்றிய அவர்,
* இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலா துறையில் முதலிடம் வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
* பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே 2வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 56 சதவீதம் அளவுக்கு முதலீடுகளை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
* விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் 2 சதவீத உள்ஒதுக்கீட்டு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
* 7 லட்சம் ரூபாய் வரை வழங்கும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
* ஆறு, குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பன்னாட்டு ஜவுளி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
* தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
* அடிப்படை தேவைகளாக உணவு, குடிநீர், சுகாதாரம், தரமான கல்வி கிடைத்தால் அதுவே உண்மையான சுதந்திரம் என்றும், அது மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்