வடமாநில இளைஞர்களிடையே மோதல் : கணவரை காப்பாற்ற முயன்ற மனைவிக்கு தலையில் அடி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் பகுதியில் தனியார் ஆலையில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட சண்டையால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் பகுதியில் தனியார் ஆலையில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட சண்டையால் பரபரப்பு ஏற்பட்டது. தனது கணவர் தாக்கப்படுவதை அறிந்த காஜால் என்பவர் சண்டை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காஜாலின் தலையில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.