சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு - அறநிலைய துறை கூடுதல் ஆணையருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கோவில் சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலைய துறை கூடுதல் ஆணையருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2018-08-02 02:27 GMT
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில், சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

முதல் தகவல் அறிக்கையில், தனதுபெயர் இல்லாத நிலையில் காவல் துறையினர் தன்னை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக மனுவில்கவிதா குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், 
சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்திருப்பதாலும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள்,  ஓராண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்தது ஏன் என்பது குறித்துவரும் 3-ஆம் தேதி பதிலளிக்கும் படி,  காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்