தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மாற்றம் - தமிழக அரசு

2018 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-07-31 03:50 GMT
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018 புதிய கட்டிட விதிகள் தமிழகம் முழுவதற்கும் பொருந்தும் என்றும், அதில் வாங்கும் விலையில் வீடுகள் கட்டுவதை ஊக்குவிக்க தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துக்கப்பட்டுள்ளது. 

மேலும், www.cmdachennai.gov.in மற்றும் www.chennaicorporation.gov.in உள்ளிட்ட இணையதளங்களிலும், 11 மாநகராட்சி, மற்றும் 124 முனிசிபாலிட்டி இணையதளங்களிலும் விதிகளை பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என, அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அதனை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் தமிழக அரசு விடுத்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு​ள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்